தமிழ்நாட்டில் கல்லூரிகளை திறப்பது குறித்து மக்கள் நல்வாழ்வுதுறை அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு முதல்வர் அறிவிப்பார் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் ஆஸ்திரேலிய நாட்டு தூதரக அதிகாரிகள், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து பேசினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் ஆகஸ்ட் 1ம் தேதி திட்டமிட்டப்படி தொடங்கும் என்றார்.
கல்லூரிகளை திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளுடன் உயர்கல்வித்துறை தொடர்பாக ஆலோசித்ததாகவும் பல்கலைக்கழகங்களுடன் 83 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாகவும் தெரிவித்தார். உயர்கல்வித்துறை வளர்ச்சிக்கு உதவுவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.