10 நிமிடத்தில் பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
புதிதாக பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு வழங்கும் பிறப்பு சான்றிதழ் என்பது கட்டாயமானதாகும். முதன் முதலில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது தேவைப்படும் இந்த முக்கியமான ஆவணத்தை தற்போது 10 நிமிடங்களில் ஆன்லைன் வழியாக எளிதாக பெற்றுக்கொள்ள முடியும்.
பிறப்பு சான்றிதழ்:
பொதுவாக ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் சேருவதற்கு, அரசு தரும் கல்வி உதவித்தொகைகளை பெற்றுக்கொள்வதற்கு, வங்கி சேவைகளுக்கு முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டைகள் பயன்படுகிறது. இந்த ஆதார் அட்டைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரே அரசு வழங்கிய பிறப்பு சான்றிதழ் முதன் முதலில் பள்ளியில் சேருவதற்கு, பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கு முக்கியமானதாகும். இந்த பிறப்பு சான்றிதழ் இல்லாமல் எந்தவொரு குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்க முடியாது.
இந்த சான்றிதழை நாம் தற்போது ஆன்லைன் வழியாக, சில எளிய முறைகளை பின்பற்றி பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக நீங்கள் செலவிடும் நேரம் என்பது வெறும் 10 நிமிடங்களே ஆகும். இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முதலில்,
https://etownpanchayat.com/PublicServices/Home.aspx#! என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
அதில் Birth Certificate என்பதில் Apply Birth Registration ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
பின்பு கேட்கப்பட்டுள்ள ஒவ்வொரு விவரங்களையும் முறையாக பதிவு செய்யவும். அதாவது மாவட்டம், பஞ்சாயத்து, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தகவல்கள் கொடுத்தவுடன், குழந்தையின் பிறந்த தேதி, பாலினம், குழந்தையின் பெயர் ஆகியவற்றை பிழையில்லாமல் நிரப்ப வேண்டும்.
அதற்கு பிறகு அந்த குழந்தையின் பெற்றோர் விவரங்கள், முகவரி, குழந்தை பிறந்த இடம் ஆகியவற்றை உள்ளிடவும். பிறகு குழந்தையுடைய தாயின் முகவரி, கல்வித்தகுதி, வேலை, திருமணம் செய்த போது இருந்த தாயின் வயது, குழந்தை பிறந்தபோது உள்ள தாயின் வயது, தந்தையின் கல்வித்தகுதி, வேலை, ஏற்கனவே குழந்தைகள் இருந்தால் அதன் எண்ணிக்கை, தற்போது பிறந்த குழந்தையின் எடை, பிரசவ முறை, பிரசவம் செய்தவர்கள், கர்ப்ப காலம் உள்ளிட்ட தகவல்களை சரியாக கொடுக்க வேண்டும்.
கொடுத்துள்ள தகவல்கள் அனைத்தையும் சரி பார்த்து Submit கொடுக்கவும்.
பின்னர் உங்கள் தொலைபேசி எண்ணுக்கு Acknowledgement எண் அனுப்பப்படும்.
இந்த எண்ணை வைத்து, உங்கள் விண்ணப்ப விவரங்களை நீங்கள் சரி பார்த்து கொள்ளலாம். அதாவது
https://etownpanchayat.com/PublicServices/Home.aspx#! என்ற இணையதளத்தில் Birth Details இருக்கும்.
அதில் Birth Certificate Search ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் கேட்கப்படும் தகவல்களை நிரப்பியவுடன் Generate கொடுக்கவும்.
இப்போது உங்கள் பிறப்பு சான்றிதழை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.