பாலிடெக்னிக் 'அட்மிஷன்' பதிவுக்கு 19 வரை அவகாசம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, July 11, 2021

பாலிடெக்னிக் 'அட்மிஷன்' பதிவுக்கு 19 வரை அவகாசம்



பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, 51 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா முதலாம் ஆண்டு படிப்பில், 18 ஆயிரத்து 120 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு, கடந்த மாதம் துவங்கியது.


பதிவு இன்றுடன் முடிவதாக இருந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதியும், கூடுதல் மாணவர்களை சேர்க்கும் வகையிலும், 19ம் தேதி வரை நீட்டிப்பு வழங்கி, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 



டிப்ளமா இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும், பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், https://tngptc.in/ என்ற இணையதளத்தில், தங்களின் விபரங்களை பதிவு செய்யலாம்.


Post Top Ad