'வாட்ஸ் ஆப்' சமூக வலை தள நிறுவனம், கடந்த ஒரு மாதத்தில் 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கியுள்ளது.
மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம், மே 26ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களுக்கு கட்டுப்படுவதாக உறுதியளித்துள்ளோம். தேவையற்ற மற்றும் வன்முறையை துாண்டும் தகவல்கள் பரிமாற்றப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில நடவடிக்கைகள் எடுத்தோம்.
அதன்படி மே 15 - ஜூன் 15 வரை நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், தேவையற்ற, வன்முறையை துாண்டும் வகையிலான தகவல்கள் பரிமாற்றப்பட்ட 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கினோம். சர்வதேச அளவில் மாதந்தோறும் இதுபோல் எட்டு லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்கி வருகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.