புதுச்சேரியில் கொரோனா 3ம் அலை? 21 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு


புதுச்சேரியில் 21 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா இரண்டாம் அலை தொற்று பரவல் தீவிரமடைந்தது.மே மாதத்தில் மட்டும், கொரோனாவால் 750 பேருக்கு மேல் இறந்தனர். தினசரி 2௦௦௦க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அரசு தடுப்பூசி பணியை தீவிரப்படுத்தியதை தொடர்ந்து, தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம், மாநிலத்தில் 108 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாகியை சேர்ந்த முதியவர் ஒருவர் இறந்தார்.இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகள் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 குழந்தைகள் 5 வயதிற்கு உட்பட்டவர்கள்; நான்கு குழந்தைகள் 5 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.இதனால், புதுச்சேரியில் கொரோனா மூன்றாம் அலை பரவத் துவங்கிவிட்டதோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive