மத்திய அரசின் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 என ஆண்டுக்கு ரூ.36,000 பென்ஷன் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்த முழு விவரம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
விவசாயிகளுக்கு அறிவிப்பு:
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி மூலமாக ஏழை எளிய விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணையாக ரூ.2000 என மொத்தமாக ரூ.6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்நிலையில் அதே போல வேறொரு திட்டமும் உள்ளது. மத்திய அரசின் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 என ஆண்டுக்கு ரூ.36000 பென்சன் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விவசாயிக்கு இரண்டு ஹெக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் இருக்க வேண்டும். இரண்டு ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் பிரதமர் கிசான் மந்தன் யோஜனாவின் பலன்களைப் பெற முடியாது. 18 வயதாக இருக்கும் போதே இத்திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் பங்களிப்பு வழங்க வேண்டும். 30 வயதில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 பங்களிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு முதலீடு செய்யும் போது ஓய்வுக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் பென்சன் பெற முடியும். இத்திட்டத்தில் இணையும் விவசாயிக்கு 60 வயது ஆகும்போது அவரது வங்கிக் கணக்கில் குறைந்தது ரூ.3,000 வந்து சேரும். இத்திட்டத்துக்கான வயது வரம்பு 18 முதல் 40 ஆகும். இதில் இணையும் விவசாயி தனது 60 வயது வரையில் மாதத்துக்கு ரூ.55 முதல் ரூ.200 பிரீமியம் செலுத்த வேண்டும். விவசாயிகள் இத்திட்டத்தில் இணையும் வயதைப் பொறுத்து பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இத்திட்டத்தில் இணைவதற்கு maandhan.in என்ற முகவரியில் செல்லலாம். ஆதார், வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவற்றை வைத்து இணையலாம்.