ஜூலை மூன்றாவது வாரத்தில் பள்ளிகளை திறக்கவேண்டும் - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, July 3, 2021

ஜூலை மூன்றாவது வாரத்தில் பள்ளிகளை திறக்கவேண்டும் - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை


கற்றல் முடக்கம்- மாணவர்கள் பாதிப்பு.
கொரோனா பெருந்தொற்று குறைந்துவருவதால் ஜூலை மூன்றாவது வாரத்தில் பள்ளிகளை திறக்கவேண்டும்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர்
 பி.கே.இளமாறன்
வேண்டுகோள் .


கடந்த மார்ச் 2020 முதல் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு 2021 சிலநாட்கள் 10,12 ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர மற்றவகுப்பு மாணவர்களை பள்ளிகளுக்கு வரச்சொல்லவில்லை.
    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கற்றல்-கற்பித்தல் பணி முடக்கத்தில் உள்ளது. கல்வித்தொலைகாட்சி - இணையவழி கல்வியென்பது ஒருவழிப்பயிற்சியாகும் அது முழுமையாகப் பயன்தராது. கொரோனா பெருந்தொற்று தமிழ்நாட்டில் 36 ஆயிரத்தைக் கடந்த நிலையில் மாண்புமிகு. தமிழகமுதல்வர் அவர்களின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் 90 %சதவீதம் குறைத்தது தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பாராட்டி வரவேற்கின்றோம். மக்கள் வாழ்க்கையும் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறார்கள்.அனைத்துசெயல்களும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. ஆகையால் மாணவர்களின் நலன்கருதி முடங்கிப்போயிருக்கும் கற்றல்பணியினை தொடங்கப் பள்ளிகளை திறக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகிறது. குறிப்பாக தொடக்கக்கல்வி மாணவர்கள் எழுத்துகளே மறந்துபோகும் நிலை உருவாகியுள்ளது. உயர்,மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறைந்துள்ளது. எனவே முற்றிலுமாக கொரோனா தொற்று குறையாதக் காரணத்தினால் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை தினந்தோறும் 5 பாடவேளைகளுடனும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையிலும் பள்ளிகள் இயங்குவதற்கு ஆவனச் செய்ய வேண்டும். மேலும் பள்ளிகள் திறந்தவுடன் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனைகளை பெற்றோர்களுக்கு வழங்கிடவேண்டும்.மாணவர்கள் நெடுங்காலம் கற்றல் தொடர்பில்லாமல் இருந்துவருவதால் முதல் ஒரு வாரம் மாணவர்களுடன் ஆசிரியர்கள் கலந்துரையாடி மனரீதியாகக் கற்றல் சூழலுக்கு கொண்டுவந்தபிறகு பாடங்களை நடத்த அறிவுறுத்தவேண்டும்.தேவையான அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள் சானிடைசர், சோப்பு உள்ளிட்டவைகளுடன் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்துமாத்திரைகள் வழங்கிடவேண்டும். தற்போதையச்சூழலில் கல்வியின் தேவையறிந்து மாணவர்களின் நலன்கருதி பள்ளிகளை ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கிட. ஆவனச்செய்ய வேண்டி
 மாண்புமிகு. முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
 பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716




Post Top Ad