தமிழக பள்ளிக் கல்வித்துறையில் அடிப்படை பணி விபரங்கள் – இணை இயக்குனர் உத்தரவு!


தமிழக பள்ளிக் கல்வித்துறையில் அடிப்படை பணி விபரங்கள் – இணை இயக்குனர் உத்தரவு!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் உள்ள இரவுக் காவலர் மற்றும் துப்புரவாளர் போன்ற அடிப்படை பணிகள் தொடர்பான விவரங்களை கோரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித்துறையின் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு, அந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. புதிய ஆட்சியில் இந்த பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல முறை அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அடிப்படை பணிகளான இரவுக் காவலர் மற்றும் துப்புரவாளர் போன்ற பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதற்காக அனுப்பியுள்ள படிவத்தில் வரும் ஜூலை 10ம் தேதிக்குள் விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவரங்களை சேகரிக்கும் பணியின் போது எந்த பள்ளியும் விடுபடாமலும், அனைவரின் விவரங்களும் கவனமாக சேகரிக்கப்பட்டு படிவங்களை பூர்த்தி செய்ய அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive