நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய அமைக்கப்பட நீதிபதி ராஜன் குழுவின் அறிக்கையில் உள்ள புள்ளி விவரங்களில் மருத்துவத்தில் சேரும் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களே தமிழ்வழியில் பயில்வர் நீட் தேர்வால் அந்த மாணவர் எண்ணிக்கை கனிசமாக நீட் தேர்வால் குறைந்துள்ளது.
கடந்த 2017 ம் ஆண்டு நீட் தேர்வுக்கு முன்னர் அரசு அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் புள்ளி விவரங்கள்
தமிழ்வழி மாணவர்கள்
2014-15ம் ஆண்டு- 481 பேர்
2015-16ம் ஆண்டு - 456 பேர்
2016-17ம் ஆண்டு - 430
நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட பிறகு
2017-18ம் ஆண்டு- 41 மாணவர்கள்
2018-19ம் ஆண்டு - 88 மாணவர்கள்
2019-2020ம் ஆண்டு - 58 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
அதேபோன்று நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட பிறகு மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை காட்டிலும் CBSE பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களின் சதவிகிதம் படிப்படியாக அதிகரித்துள்ளதை ஏ.கே ராஜன் குழு அறிக்கை சுட்டிகாட்டுகிறது.
அதன்படி..
மாநில பாடத்திட்டம் VS சிபிஎஸ்இ
2014-15ல் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் 99.80%
சிபிஎஸ்இ 0.20%
2015-2016ம் ஆண்டு மாநிலபாடத்திட்டம் 99.40%
சிபிஎஸ்இ 0.60%
2016-17 மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் 98.46%
சிபிஎஸ்இ 1.54%
நீட் தேர்வுக்கு பிறகு
2017-18 மாநில பாடத்திட்ட மாணவர்கள் 67.9%, சிபிஎஸ்இ - 36.05%
2018-2019 மாநில பாடத்திட்டத்தில் சேர்ந்த மாணவர்கள் 72.69%, சிபிஎஸ்இ 22.30%
2019-2020 ல் மாநில பாடத்திட்டத்தில் சேர்ந்த மாணவர் விவரம் 66.07%, சிபிஎஸ்இ 34%
நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட பிறகு சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் சதவீத அடிப்படையில் கணிசமாக உயர்ந்துள்ளது புள்ளிவிவரங்களில் தெரியவருகிறது.