வனத்துறை காலியிடங்கள் நிரப்ப ஐகோர்ட் உத்தரவு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, July 3, 2021

வனத்துறை காலியிடங்கள் நிரப்ப ஐகோர்ட் உத்தரவு


வனத்துறை காலியிடங்கள் நிரப்ப ஐகோர்ட் உத்தரவு

தமிழக வனத்துறையில் காலிப் பணியி டங்களை நிரப்பக் கோரிய வழக்கில், ‘ஆட் சேர்ப்பை விரைவில் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.

மதுரை கே.கே.நகர் வெரோனிகா மேரி தாக் கல் செய்த பொதுநல மனுவில், 'தமிழக வனத் துறையில் வனக்காவலர், வனக்காப்பாளர் அனு மதிக்கப்பட்ட பணியிடங்கள் 1,700. இதில் 644 பணியிடங்கள் காலியாக உள்ளன. முன்னுரிமை அடிப்படையில் வனக்காவலர், வனக்காப்பாளர் மற்றும் இதர காலிப் பணியிடங்களை நிரப்ப

உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார். தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் உத்தரவு: கொரோனா பரவல் காரணமாக 16 மாதங்க ளாக ஆட்சேர்ப்பில் பின்னடைவு ஏற்பட்டிருக் கலாம். வனத்தை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பு முயற்சியை தடுக்கவும், அரசு உடனடி நடவ டிக்கை எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆட்சேர்ப்பை எவ்வளவு விரைவில் நடத்த முடியுமோ, அவ்வளவு விரைவில் நடத்துவதை உறுதி செய்ய மாநில அரசை இந்நீதிமன்றம் வலி யுறுத்துகிறது. வழக்கை பைசல் செய்கிறோம். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Post Top Ad