அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பம்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, July 25, 2021

அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பம்!


கல்லூரிக் கல்வி இயக்ககம் இன்று (25/07/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2021- 2022) விண்ணப்பங்களை www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.

நாளை (26/07/2021) முதல் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation centre-AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து 'AFC' மையங்களிலும் போதிய அளவில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பத்தாரர்கள் Debit Card/Credit Card/Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணம் மட்டும் ரூபாய் 2 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணமாக 48 ரூபாயும், பதிவு கட்டணமாக 2 ரூபாயும் செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai- 6" என்ற பெயரில் 26/07/2021 அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம்." இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post Top Ad