2021- 2022 ஆம் கல்வியாண்டு முதல் அரசுக் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்ட 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் முதலமாண்டு மாணவர் சேர்க்கை குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். இணைப்பில் உள்ள 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில் 2021 2022 ஆம் கல்வியாண்டு முதல் மேற்காண் கல்லூரிகளில் முதலாமாண்டு இளநிலை மற்றும் முதுநிலை சேர்க்கைப் பணியினை அரசுக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கலாகிறது . எனவே 2021-2022 ஆம் கல்வியாண்டில் TNGASA ( Tamilnadu Govt . Arts and Science College Admissions ) வாயிலாக நடைபெற உள்ள விண்ணப்பித்தல் மற்றும் சேர்க்கைப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
New Government Colleges Admission - Download here