ஜேஇஇ மெயின் நான்காம் கட்ட தேர்விற்கான தேதி மாற்றம்
ஜேஇஇ மெயின் மூன்றாம் கட்ட தேர்வு ஜூலை 20 முதல் 25 வரையும், நான்காம் கட்ட தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நான்காம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
மூன்றாம் கட்ட தேர்விற்கும், நான்காம் கட்ட தேர்விற்கும் இடையே குறைந்தது 4 வாரங்கள் இடைவெளி தேவை என தேசிய தேர்வுகள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், ஜேஇஇ நான்காம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 தேதிகளுக்கு மாற்றப்படுகிறது.
ஜேஇஇ நான்காம் கட்ட தேர்விற்கு இதுவரை 7.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பத்திற்கான கடைசி நாளாக ஜூலை 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜேஇஇ மெயின் தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது.