TET - வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்தவர்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சருடன் சந்திப்பு.


 

ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்கள் பெற்றபோதிலும், வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்தவர்கள், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.


சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்த அவர்கள், 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற சுமார் 6 ஆயிரம் பேர், வெயிட்டேஜ் முறையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு கிடைக்காமல் பலர் கூலி வேலைக்கு செல்வதாகவும் வேதனை தெரிவித்தனர். ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது, 2013ஆம் ஆண்டில் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சிபெற்று, வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive