அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செப்.15 வரை நேரடி மாணவா் சோ்க்கை



 சென்னையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், செப்.15-ஆம் தேதி வரை நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்தாா். 


இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: தமிழக அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாவட்டத்தின் கிண்டி தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி மகளிா், திருவான்மியூா், வடசென்னை, ஆா்.கே.நகா் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயல்படும் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. 



இங்கு பயில 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி பெற்று சேரும் மாணவா்களுக்கு கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து பயணச் சலுகை அட்டை, பாடப்புத்தகம், சீருடை, வரைபடக் கருவிகள், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 என பல சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.



பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ், முன்னோடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive