சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத் தேர்வு ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
12-ஆம் வகுப்பு மதிப்பெண் முறையில் திருப்தி இல்லாத மாணவர்கள் துணைத்தேர்வை எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 பாடங்களுக்கு மட்டுமே துணைத் தேர்வு நடைபெறும் என்றும்,
துணைத் தேர்வு எழுத விரும்புவோர் விண்ணப்பிக்க ஏதுவாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் சிபிஎஸ்இ தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
விருப்பத்தேர்வு எழுத விரும்புவோர் மீண்டும் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனவும், ஏற்கெனவே கட்டணம் செலுத்திய தனித்தேர்வர்களும் மீண்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.