ஒரே நேரத்தில் நமது மொபைலில் இரண்டு Whatsapp Accountகளை கையாளும் முறைகள் குறித்தும், அதன் வழிமுறைகள் குறித்தும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
Whatsapp Account:
வாட்ஸ்ஆப்ல் பல அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்களும் அவ்வபோது அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியில் வாட்ஸ்அப் செயலி முக்கிய இடத்தில் உள்ளது. பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். உலகளவில் பிராந்திய மொழிகள் மூலம் 100 எம்பி கோப்புகளையும் வாட்ஸ்ஆப்பில் எளிதாக பகிர முடியும். இதன் மூலம், PDF கள், ஆவணங்கள், விரிதாள்கள், ஸ்லைடு காட்சிகள் மற்றும் இது போன்ற பல ஆவணங்களையும் பகிர முடியும்.
ஒரே மொபைலில் இரண்டு Whatsapp Accountகளை நாம் பயன்படுத்தும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலக பணிகள் மற்றும் தனிப்பட்ட பயன்பாடு போன்ற காரணங்களால் தற்போது இரண்டு Whatsapp Accountகள் நமக்கு பயன்படுகிறது. இதனை நாம் எளிதாக ஒரே மொபைலில் கையாளும் வகையில் செயல்முறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வழிமுறைகள்:
முதலில் உங்கள் மொபைலில் settings பகுதிக்கு செல்ல வேண்டும்.
அதில், ‘அப்ளிகேஷன் மற்றும் பர்மிஷன்கள்’ என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
இப்பொழுது ‘App Clone Feature’ என்ற தேர்வை தேர்வு செய்ய வேண்டும்.
அதில், whatsapp என்ற தேர்வை தேர்வு செய்ய வேண்டும்.
இப்பொழுது WhatsApp குளோன் செய்யப்படும்.
தற்போது உங்கள் மொபைலில் மற்றொரு மொபைல் எண்ணின் WhatsApp -ஐயும் இயக்க முடியும்.
மேலும், whatsapp குரூப் கால் அப்டேட்:
வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களின் பயன்பாட்டுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் குழு குரல் அழைப்பு அல்லது குழு வீடியோ அழைப்பைத் தொடங்கியவுடன் சேரும் வகையில் உள்ளது. இந்த அம்சம் ஒரு புதிய அழைப்பு தகவல் திரையையும் கொண்டுவருகிறது, இது அழைப்பில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க உதவுகிறது. இதில்,புதிய அம்சம், என்னவென்றால் அம்சம் பயனர்கள் குழு அழைப்பில் எப்போது சேர விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானிக்கவும், பயனர்கள் ஏற்கனவே இருக்கும் அழைப்பிலிருந்து விலகவும், அழைப்பு தொடர்ந்து நடந்து கொண்டால் மீண்டும் சேரவும் அனுமதி அளிக்கிறது.