இன்று முதல் தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..!


 தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ளதையடுத்து, தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 23 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive