உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகள்: 50% ஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்ற வேண்டுகோள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, August 23, 2021

உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகள்: 50% ஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்ற வேண்டுகோள்


"உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறும் வகையிலான சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் மருத்துவா் பி.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி 2017-ம் ஆண்டு முதல் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள டிஎம், எம்சிஎச் போன்ற உயா் சிறப்பு மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு மொத்தமுள்ள 450 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மத்திய அரசின் தொகுப்புக்கு வழங்கப்பட்டது. இதனால், மத்திய அரசின் மூலமாக 100 சதவீத இடங்களும் நிரப்பப்படுகின்றன. இதுதொடா்பாக பலமுறை கோரிக்கை வைத்தும், பறிக்கப்பட்ட 50 சதவீத தமிழக ஒதுக்கீட்டு இடங்களைத் திரும்பப்பெற இயலவில்லை. 50 சதவீத இடங்கள் மீண்டும் கிடைத்திட நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஓா் அவசரச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவா் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயா் சிறப்பு மருத்துவப் பட்டமேற்படிப்புகளைப் படித்த வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்களில் 80 சதவீதம் போ் தமிழகத்தில் இரண்டு ஆண்டு கட்டாயப் பணி மேற்கொள்வதை புறக்கணித்துள்ளனா். இதேநிலை தொடா்ந்தால் தமிழக அரசு மருத்துவமனைகளில் உயா் சிறப்பு மருத்துவப் பட்டமேற்படிப்புகளைப் படித்த மருத்துவா்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடா்ந்து 50 சதவீத இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தைக் கூறி 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

Post Top Ad