தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!


தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் செப். 1 வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியான மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

மாணவர் சேர்க்கை:

தற்போது மாணவர்களிடம் கல்வி கற்பது குறித்த ஆர்வம் அதிகரித்து வருகின்றது. 12ம் வகுப்பு முடித்து இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் பல்வேறு படிப்புகளை தேர்வு செய்து படித்து வருகின்றனர். கல்லூரிகளிலும் மாலை நேர வகுப்புகள், சான்றிதழ் வகுப்புகள் என நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தொழிலாளர் மேலாண்மையில் பட்ட மேற்படிப்பு மற்றும் பகுதி நேர பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழிலாளர் கல்வி நிலையத்தில் எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை மற்றும் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டப்படிப்பு (பி.ஜி.டி.எல்.ஏ.), தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும் (டி.எல்.எல்.) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படிப்புகளுக்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

எனவே ஆர்வமுள்ள மாணவர்கள் tilschennai@tn.gov.in என்னும் மின்னஞ்சல் மூலம் பெயர், தொலைபேசி எண், முகவரி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை அனுப்பி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு 044 – 29567885 / 29567886 என்ற தொலைபேசி எண் மூலம் தெரிந்துகொள்ளலாம் என தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive