'புதிய கல்வி கொள்கை அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் மாற்றி அமைக்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. நாடு முழுதும் பட்டப் படிப்புடன், பி.எட்., படிப்பு முடிப்பவர்கள், ஆசிரியர்களாக பணியில் சேர கல்வி தகுதி பெற்றவர்கள். புதிய அறிவிப்புஇந்த பட்டதாரிகள், மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சில் வழிகாட்டுதல்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஆசிரியர் பணியில் சேர முடியும்.
இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாளில் மாற்றம் செய்வது குறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வுகளை, புதிய கல்வி கொள்கை அடிப்படையிலான வினாத்தாள்களுடன் நடத்த, மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதனால், மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில், வினாத்தாள்களில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.சோதனை செய்யும்அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:அடிப்படை கேள்விகள் குறைவாகவும், சிந்தித்து பதில் அளிக்கும் வகையிலான கேள்விகள், அதிக அளவிலும் இருக்கும். 'டிஜிட்டல்' வழி கற்பித்தல் முறையை, சோதனை செய்யும் வகையில் வினாக்கள் இருக்கும்.
பாடத் திட்டங்களை புரிந்து கொள்ளும் திறன், கற்பித்தல் முறையில் முன்னுதாரணமான செயல்பாடு, கற்பித்தல், கற்றல் உபகரணங்களின் பயன்பாடு என, பல வகைகளில் பட்டதாரிகளை சோதனை செய்யும் கேள்விகள் இடம் பெறும். மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு, இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில், 'ஆன்லைன்' வழியில் மட்டும் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.