ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி ( EMIS , HI - Tech Lab , ICT ) 12.08.2021 முதல் தொடக்கம். - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, August 7, 2021

ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி ( EMIS , HI - Tech Lab , ICT ) 12.08.2021 முதல் தொடக்கம்.


ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி - முதற்கட்டமாக 09.08.2021 க்கு பதில் 12.08.2021 முதல் தொடங்கும் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்




ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து கற்றல் , கற்றுக் கொண்டே இருத்தல் , அறிவை புதுப்பித்தல் ஆகியன மிக அவசியம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் பணியிடைப் பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , HI - Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு அதற்கான கருத்தாளர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் 2.8.2021 முதல் 6.8.2021 வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது . இப்பயிற்சியானது பல கட்டங்களாக ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

5.8.2021 அன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் , முதற்கட்டமாக 12500 முதுநிலை ஆசிரியர்களுக்கு 9.8.2021 அன்று முதல் திட்டமிடப்பட்டிருந்த பயிற்சி 12.08.2021 . 13.08.2021 . 16.08.2021 முதல் 18.08.2021 வரை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே , பயிற்சி நன்முறையில் நடைபெறுவதற்கு தேவையான ஆயத்த பணிகள் அனைத்தையும் மாவட்டங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இதற்காக 26.7.2021 முதல் 30.7.2021 வரையில் நடைபெற்ற கருத்தாளர் பயிற்சியிலிருந்து 264 கருத்தாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் . இரு கருத்தாளர்கள் இணைந்து ஒரு குழுவாகும். ஒவ்வொரு கருத்தாளர் குழுக்களும் 100 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். தெரிவு செய்யப்பட்ட 264 கருத்தாளர்களின் பெயர் பட்டியல் 132 கருத்தாளர் குழுக்களாக பிரிக்கப்பட்டு இணைப்பு 1 - ல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி அளிக்கப்பட வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை விபரமும் இணைப்பு 2 - ல் கொடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 12500 முதுநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படவுள்ளதால் , 125 கருத்தாளர் குழுக்கள் மட்டும் போதுமானதாகும் , கொடுக்கப்பட்டுள்ள கருத்தாயார் பட்டியலில் கோயமுத்தூர் , தருமபுரி , ஈரோடு , மதுரை , புதுக்கோட்டை சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் மட்டும் கூடுதலாக இரு கருத்தாளர்கள் ( ஒரு குழு ) உள்ளனர் . எனவே , மேற்குறிப்பிடப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் மட்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே கொடுக்கப்பட்டுள்ள கருத்தாளர் பட்டியலிலிருந்து மாவட்டங்களுக்கான கருத்தாளர்களை தெரிவு செய்து கொள்ளவேண்டும்.

ICT - SPD proceedings - Download here...


Post Top Ad