SBI வங்கியில் நகை கடனுக்கு 7.5% வட்டி – யோனோ செயலியில் விண்ணப்பிப்பது எப்படி? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, August 6, 2021

SBI வங்கியில் நகை கடனுக்கு 7.5% வட்டி – யோனோ செயலியில் விண்ணப்பிப்பது எப்படி?


இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு 7.5% வட்டி விகிதத்தில் தங்கக் கடனை வழங்குகிறது. இதற்கான யோனோ செயலியில் விண்ணப்பப்பதிவு செய்யும் நடைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் அவசர கால தேவைகளில் அவர்களின் நிதியைப் பாதுகாப்பது தொடர்பாக SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குகிறது. அந்த வகையில் பலரும் வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெற்றுக்கொள்ள முக்கிய வங்கிகளை தேர்வு செய்வது கட்டாயமாகும். இருப்பினும், தங்கக் கடன்களுக்கான பாதுகாப்பு மற்றும் குறைந்த வட்டியை SBI வங்கி அளிக்கிறது. அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான SBI வங்கி தங்க நகைகளுக்கான கடன்களை 7.5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்குகிறது. இந்த கடன்களை SBI வாடிக்கையாளர்கள் YONO செயலி மூலம் எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். தங்க நகைக்கான கடன்களை பொருத்தளவு, தங்க ஆபரணங்கள் அல்லது பொருள்களை அடகு வைப்பதன் மூலம் வேண்டிய அளவு தொகைகளை கடனாக பெற்றுக்கொள்ள முடியும். இப்போது SBI வங்கியின் யோனா செயல்பாடுகள் மூலம் இந்த கடனுக்காக விண்ணப்பிக்கும் வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், முதலாவது கடனுக்கு விண்ணப்பிக்க,


YONO கணக்கில் உள்நுழையவும்.
அதன் முகப்பு பக்கத்தில் உள்ள மெனுவின் மேலே இருக்கும் மூன்று கோடுகளை கிளிக் செய்யவும்

அதில் loans என்பதைக் கிளிக் செய்யவும்
அதன் கீழ், தங்கக் கடனை கிளிக் செய்யவும்
பிறகு Apply Now என்பதைக் கிளிக் செய்யவும்
அளவு, வகை, நிகர எடை, கேரட் போன்ற ஆபரணம் உள்ளிட்ட விவரங்களுடன் தொழில் மற்றும் குடியிருப்பு வகைகளை கொடுக்கவும்.
நிகர மாத வருமானத்தை நிரப்பவும்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
தொடர்ந்து தங்க கடனை பெற்றுக் கொள்ள உரிய வங்கி கிளையை பார்வையிட வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்வதற்கு இரண்டு புகைப்படங்கள் மற்றும் KYC ஆவணங்களை எடுத்துச் செல்லவும்

பின்னர் ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும்.

இப்போது தங்கக் கடனைப் பெற்று கொள்ளலாம்.

SBI தனிப்பட்ட தங்கக் கடனை பெற்றுக் கொள்ள, நிலையான வருமானத்துடன் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் ஓய்வூதியதாரர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.

இதற்கான முக்கியமான ஆவணங்களாக, இரண்டு புகைப்பட நகல்களுடன் தங்கக் கடனுக்கான விண்ணப்பம், முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று தேவைப்படும்.

விண்ணப்பங்களை செலுத்தியவுடன் கடனாக குறைந்தபட்ச தொகையாக ரூ.20,000 மற்றும் அதிகபட்ச தொகையாக ரூ.50 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது.

SBI வாடிக்கையாளர்களுக்கு தங்கக் கடனுக்கான வட்டில் 7.5 சதவீதமாக வழங்கப்படுகிறது.

இவற்றை திருப்பி செலுத்த 36 மாதங்கள் வரை கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.

Post Top Ad