![1666873512894120-0 1666873512894120-0](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi56do1G6572nLpOoU3N3SZ36e08D0AcAwjOZJ2qhnzfgy7_Ag6qohAIBkE_q_dXfChmZurkvoEZPhYWYNQ8CTDXmbvarsG7avu8NmxESaalEarOWyduSYC4jrt5KJ5jou_QsMlMEN1E_yrczdhqT_w9vUZXcP1gTMHiJthp7swhTTCqvnCA1JYMswcvg/w300-h400/1666873512894120-0.png)
இந்நிலையில் வருகின்ற
29.10.2022 அன்று நடைபெறும் கூட்டத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை
கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே குறுவள மையக் கூட்டம் நடைபெறும்
எனவும் , பல்வேறு நிர்வாக காரணங்களால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு
கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறுவள் மையக் கூட்டம் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது எனவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்
தெரிவிக்கலாகிறது.
எனவே . வருகின்ற 29.10.2022 அன்று நடைபெறவுள்ள குறுவள மையக் கூட்டத்திற்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு ( 1. தமிழ் , 2. ஆங்கிலம் . 3. கணக்கு . 4.அறிவியல் . 5. சமூக அறிவியல் ) கற்பிக்கும் ஆசிரியர்களை , தெரிவு செய்யப்பட்ட இடத்தில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக , அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழியாக ஆசிரியர்களை குறுவள மையக் கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .