குமரி மாவட்டத்துக்கு நவம்பர் 1-ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
கன்னியாகுமாரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளை கொண்டாடும் விதமாக இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈடுசெய்ய நவம்பர் 12-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.