பணிச்சுமையால் ஆசிரியை தற்கொலை!

 



விழுப்புரம் மாவட்டம் அனந்தபு ரம் அருகே உமையாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அசாரு தீன். இவருடைய மனைவி ஆயிஷா (வயது 31). இவர் திரு வெண்ணெய்நல்லூர் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசி ரியையாக பணியாற்றி வந்தார். 

ஆயிஷா அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி பள் ளிக்கு சென்று வந்தார். பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஆயிஷாவுக்கு பணிச்சுமை அதி கமாக இருந்ததாக கூறப்படு கிறது. இதனால் கடந்த சில நாட்களாக ஆயிஷா மனஅழுத் தத்தில் இருந்து வந்ததாக தெரி கிறது. இந்தநிலையில் வாடகை வீட்டில் நேற்று காலை 11.30 மணிக்கு தூக்குப்போட்டு தற்
கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive