EMIS - Self Evaluation - PINDICS முடிக்க நவம்பர் 4 கடைசி தேதி!

 

அசிரியர் செயல்திறன் சுய மதிப்பீடு படிவம் சமர்ப்பிக்க நவ.4 கடைசி

சென்னை, அக். 29: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசி ரியர்கள் வகுப்பறை செயல்பாடுகளை தாங்களாகவே மதிப்பீடு செய்யும் வகையில் ஆசிரியர் செயல்திறன் சுய மதிப்பீடு படிவம் 'எமிஸ்' தளத்தில் வெளியிடப்பட் டுள்ளது. இந்தப் படிவத்தை நவம்பர் 4-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மத்திய திட்ட ஒப் புதல் குழு சார்பில், மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்தப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள் ளிகளில் பிளஸ் 2 வரை கையாளும் அனைத்து பாடஆசி ரியர்களும் இதைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

'எமிஸ்' இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந் தப் படிவத்தில், வகுப்பறை செயல்பாடுகள் தொடர் பான கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு 4 தெரிவு கள் கொடுக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் தங்களின் செயல்பாட்டை தேர்வு செய்ய வேண்டும்.

இந்தக் கேள்விகள் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை களை சுயமதிப்பீடு செய்து கொள்ளும் வகையில் வடிவ மைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிவத்தை பூர்த்தி செய்த பின், தலைமையாசிரியர் இதை, மறுஆய்வு செய்ய வேண் டும்.

எமிஸ் இணையதளத்தில், ஆசிரியர்களுக்கான பகு தியில் பதிவேற்றப்பட்டுள்ள இந்தப் படிவத்தை, வரும் நவம்பர் 4-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பது அவசியம். அதன் அடிப்படையில், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சியை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள் ளது. இதற்கு, இணையதள செலவினங்களுக்கு பிரத்யே கமாக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்துக்கு ரூ. 85,290, கோவைக்கு ரூ. 90,530, மதுரைக்கு ரூ. 1,04,610, திருச்சி ரூ.1,00,100, சேலத் துக்கு ரூ.1,24,410 என அனைத்து மாவட்ட அரசுப் பள் ளிகளுக்கும் மொத்தம் ரூ. 26 லட்சத்து 11ஆயிரத்து 760 பரிமாற்றப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை விரைந்து முடித்து படிவம் சமர்ப் பிக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.









0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive