அரசு பள்ளிகளில் நாளை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் Kalviseithi 11:46 AM SMC,


.com/அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை, பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குனர் சுதன் அனுப்பிய சுற்றறிக்கை:


அனைத்து அரசு பள்ளிகளிலும், நாளை பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த வேண்டும்.


இதில், பள்ளி வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, கற்றல், கற்பித்தலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத் திட்டங்களின் செயல்பாடு போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும்.

நவ., 1ல் உள்ளாட்சிகளில் நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களில், பள்ளியின் வளர்ச்சி குறித்து பேசுவது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். இந்த கூட்டத்தில், மேலாண்மை குழுவில் உள்ள ஆசிரியர், சமூக ஆர்வலர், கவுன்சிலர் உள்ளிட்டவர்களை பங்கேற்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive