PGTRB பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு அடுத்து வரக்கூடிய தேர்விற்கு Syllabus மாற்றம் குறித்த கலந்தாலோசனை கூட்டம் 14.11.2022 ல் நடைபெற உள்ளது. இதில் பாடத்திட்டத்தை முற்றிலும் புதிய வடிவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிகப்படியான அலகுகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்தும் பழைய கருத்துக்கள் நீக்கம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ள புதிய கருத்துக்களை இணைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் தெரிவித்துள்ளார்.