![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcsOdJM8DZdkBUfUNS2kRuzlsRor9iih9zcHIxq7AU40FKmDJiE-gQfai82hUjolrEMmbIJ0TC5tKLfswaVPh1-vuQ4jvLWg9k54LGvRWNwHI-V6QaGNij0hTsSTZbZY5RZOt7UN1d4LOrj7Tqz7LjV3S8f4KpdyEkW_uAJqGxZKwShCmzuKHzrkLAvg/s320/8.png)
அதன்பின்னர்
பொதுப்பிரிவு கலந்தாய்வு மொத்தம் 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது. அதில் 3
சுற்றுகள் முடிவில் 58,307 இடங்கள் நிரம்பின. இறுதியாக 4-ம் சுற்று
கலந்தாய்வு அக்டோபர் 29-ல் தொடங்கியது. இதில் பங்கேற்க மொத்தம் 61,771
மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் 36,057 பேருக்கு
சேர்க்கை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து தங்களுக்கு
ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் நவம்பர் 10-ம் தேதிக்குள் சென்று மாணவர்கள்
கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த
இடங்கள் வேறு நபருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும். கூடுதல் விவரங்களை
https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் அறியலாம் என்று துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொறியியல்
கலந்தாய்வு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள சூழலில், இதுவரை 95,032 இடங்கள்
நிரம்பியுள்ளன. தற்போது 4-வது சுற்றில் சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர்கள்
கல்லூரிகளில் சென்று அதை உறுதி செய்யும்போது, முதல்கட்ட கலந்தாய்வில்
நிரம்பிய இடங்களின் விவரம் முழுமையாக தெரியவரும். இவற்றில் ஏற்படும்
காலியிடங்களை நவம்பர் 3-வது வாரத்தில் நடைபெற உள்ள துணை கலந்தாய்வு மூலம்
நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், நடப்பாண்டு பொறியியல்
கல்லூரிகளில் சுமார் 50 ஆயிரம் இடங்கள் வரை காலியாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.