தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணினி பயிற்றுனர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாத
தொகுப்பூதியம் ரூ.4,000 வழங்கப்பட்டு வந்த நிலையில் ரூ.6,000 உயர்த்தி
ரூ.10,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி அறிவு பயிற்சி பெற
மாணவர்கள் செலுத்தும் தொகை ரூ.700ல் இருந்து ரூ.1,000 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது.
கணினி அறிவு பயிற்சி
திட்டத்தின் கீழ் கலை, அறிவியல் கல்லூரிகளில் 423 பயிற்றுனர்கள்
பணிபுரிந்து வருகின்றனர். ஒரு கல்வியாண்டில் 11 மாதங்களுக்கு தொகுப்பூதியம்
வழங்கப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.