வங்கக் கடலில் நாளை புயல் உருவாகிறது

  dec6

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழையும் நாளை மறுநாள் மிகக் கனமழையும் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.

வங்கக் கடலில் நாளை உருவாகும் புயல் சின்னம் வட தமிழகம் -  புதுச்சேரி நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புயல் சின்னம் காரணமாக சென்னை மற்றும் 13 மாவட்டங்களில் டிச.8-ஆம் தேதி அதி பலத்த மழைக்கு வாய்ப்பு (ரெட் அலா்ட்) இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகா்ந்து வருகிறது.

இது செவ்வாய்க்கிழமை ( டிச.6) மாலை தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து புயலாக வலுவடைந்து டிச. 8-ஆம் தேதி காலை வட தமிழகம் - புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் அருகில் கரையை வந்தடையக்கூடும்.

இதனால், டிச.8-ஆம் தேதி கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் சின்னம் உருவாகும் வாய்ப்பு இருப்பதால், புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.





Related Posts:

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

3105934

Code