பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, April 3, 2023

பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு


 

பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை வழங்க தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டதை குஜராத் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்க உத்தரவிட்டது ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் கோர்ட் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.


பிரதமர் மோடியின் சான்றிதழ் நகலை வழங்க வேண்டும் என ஒன்றிய தகவல் ஆணையம் கடந்த 2016ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு எதிராக குஜராத் பல்கலைக்கழகத்தின் சார்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.  

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, குஜராத் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜனநாயகத்தில் குறிப்பாக பிரதமர் பதவியில் இருப்போர், முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும், எழுதப்படிக்க தெரியாமல் இருந்தாலும் எவ்வித வித்தியாசத்தை ஏற்படுத்தப்போவதில்லை எனவும் இந்த விவகாரத்தி எவ்வித பொதுநலனும் அடங்கியிருக்கவில்லை என வாதிட்டார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்  கூறுகையில்; வேட்பாளர் படிவத்தில் கல்வி தகுதியை பிரதமர் பூர்த்தி செய்துள்ளார். பட்டப்படிப்பு சான்றிதழை மட்டுமே தான் கேட்டுள்ளோமே தவிர மதிப்பெண் பட்டியலில் கேட்கவில்லை என்ற வாதத்தை முன்வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த குஜராத் நீதிமன்றம், இந்த மனு மீதான தீர்ப்பை கடந்த பிப்ரவரி மாதம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தகத்து. இந்நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பை குஜராத் நீதிமன்றம் இன்று கூறியபோது, பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகலை வழங்க வேண்டுமென்ற குஜராத் பல்கலைக்கழகத்திற்கு ஒன்றிய தகவல் ஆணையம் கடந்த 2014ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் எனவும் சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் கோர்ட் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. இந்த அபராத தொகையை 4 வாரத்திற்குள் குஜராத் மாநில சட்ட பணிகள் சேவை ஆணையத்திடம் செலுத்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad