பிளஸ் 2 ரிசல்ட்- எப்போது?

 Tamil_News_large_3283547.jpg?w=360&dpr=3

மூன்று வாரங்களாக நடந்து வந்த பிளஸ் 2 பொது தேர்வு இன்றுடன் முடிகிறது.


தேர்வு முடிவை, மே, 2ம் வாரம் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.


தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 13ல் துவங்கியது.


பிளஸ் 2 தேர்வில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பள்ளி மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்கள் என, 8.75 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டனர்.


அவர்களில், சராசரியாக, 50 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வுக்கு வராமல், 'ஆப்சென்ட்' ஆகி விட்டனர். இந்த விவகாரம், தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு, அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.


இதையடுத்து, வரும் ஜூன் மாத தேர்வு அல்லது அக்டோபரில் மீண்டும் துணை தேர்வு நடத்தி, இடைநிற்றல் ஆனவர்களை, தேர்வு எழுத வைக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.


இந்நிலையில், பிளஸ் 2 பொது தேர்வு இன்றுடன் முடிகிறது. இன்று, வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.


தேர்வுகள் இன்று முடிவதால், ஒரு வாரத்தில் விடைத்தாள் திருத்தம் துவங்க உள்ளது.


அதன்பின், மே மாதம், இரண்டாம் வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளிக்கல்வியின் அரசு தேர்வுத்துறை திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive