ஏப்ரல் 20ம் தேதி நடைபெற உள்ள மாவட்டக் கல்வி அலுவலருக்கான தேர்வை தள்ளிவைக்க வேண்டும் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் - நிறுவனத் தலைவர் - சா.அருணன் கோரிக்கை
2023ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி முடிகிறது அதாவது தமிழ் ஏப்ரல் 6ம் தேதியும் 10ம் தேதி ஆங்கிலம், 13ம் தேதி கணிதம் , 15ம் தேதி விருப்ப மொழி தேர்வும், 17ம் தேதி அறிவியல் மற்றும் கடைசி த்தேர்வான சமூக அறிவியல் தேர்வு 20ம் தேதியும் நடைபெற உள்ளது
மேலும் ஏப்ரல் 20ம் தேதி டி.என்.பி.எஸ்.சி மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான தேர்வு நடத்துகிறது ( குரூப் 1சி ) இந்த தேர்வில் பெரும்பாலான ஆசிரியர்கள் பங்குக் கொள்ள உள்ளதால் 20ம் தேதி தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் ,
இந்நிலையை கருத்தில் கொண்டு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு 20ம் தேதி நடைபெறும் தேர்வு பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் , விடுவிக்க முடியாத பட்சத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான தேர்வை ஒத்திவைக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தையும் பள்ளிக்கலவித்துறையின் கீழ் இயங்கும் தேர்வுத்துறையையும் பரிசீலனை செய்து தக்க நடவடிக்கைமேற்கொள்ள பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு