தமிழகத்தில் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கலை, அறிவியல் கல்லூரிகளை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் கண்காணித்து வருகிறது. ஊட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வராக இருந்த எம்.ஈஸ்வர மூர்த்தி, முழு கூடுதல் பொறுப்பில் கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் பணிக்காலம் முடிந்து நேற்று முன்தினம் ஒய்வுபெற்றார்.
இதையடுத்து புதிய கல்லூரிக் கல்வி இயக்குநராக, திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜி.கீதாவை (முழு கூடுதல் பொறுப்பு) நியமனம் செய்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. இதையடுத்து கல்லூரிக் கல்வி இயக்குநராக அவர் நேற்று பொறுப்பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.