மாநில கல்விக்கொள்கை இந்த கல்வியாண்டில் அமலுக்கு வர வாய்ப்பில்லை என தகவல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, April 4, 2023

மாநில கல்விக்கொள்கை இந்த கல்வியாண்டில் அமலுக்கு வர வாய்ப்பில்லை என தகவல்

 

மாநில கல்விக்கொள்கை இந்த கல்வியாண்டில் அமலுக்கு வர வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கல்விக்கொள்கை தயாரிக்கும் குழுவிற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மே மாதத்துடன் நிறைவடைகிறது.பணிகள் நிறைவடையாததால் மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் கேட்க முழு திட்டம் தீட்டியுள்ளது. இதன் காரணமாக 2023-24ம் கல்வியாண்டில் மாநில கல்விக் கொள்கை அமலுக்கு வரத்து என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வரலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.   


தமிழ்நாடு இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு கல்விக் கொள்கையை வடிவமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உலகளாவிய கல்வி, இளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பம் உள்ளிடவற்றை கருத்தில்கொண்டு வடிவமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவரும் வகையிலும், பள்ளிப்படிப்பை முடிப்போர் அனைவரும் உயர்கல்வியை தொடரும் வகையில் கல்விக்கொள்கை அமைய வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டத்தை வடிவமைக்கவும் சமத்துவமான கல்வியை  தரும் வகையில் கல்விக்கொள்கையை வடிவமைக்கவும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

அது ஒரு குழந்தை பள்ளிக்கு தயாராவது முதல், பள்ளிக்குள் நுழைவது எப்போது, நுழைந்ததும் வளர்க்க வேண்டியவை, அந்த நிலையில் குழந்தையின் மனவளர்ச்சி, பின்னர் அந்தக் குழந்தை படிக்க வேண்டிய பாடங்கள், எப்படி கற்பிக்கப்படும், எப்படி அவர்கள் மதிப்பிடப்படுவார்கள், என்னென்ன பாடங்கள் எந்தவகுப்பில் இருக்கும், வகுப்புகளின் கட்டமைப்பு, என்ன மொழியில் படிக்க வேண்டும், பொதுத்தேர்வுகள் யாவை, எப்படி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளுக்குள் நுழைவார்கள், கல்லூரிகளில் என்னென்ன பட்டங்கள் எந்த கல்லூரி, மேற்படிப்பு எல்லாம் முடிக்கும் வரையில் என்னென்ன எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்வதே கல்விக்கொள்கை ஆகும்


Post Top Ad