மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்களும், குறைந்தபட்சம், 50 மணி நேர தொடர் தொழில் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என, புதிய கல்வி கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., விதிகளின்படி, ஒவ்வொரு ஆசிரியரும், குறைந்தபட்சம், 25 மணி நேர பயிற்சியில் பங்கேற்க வேண்டும்.
இதற்காக, சி.பி.எஸ்.இ., சார்பில், நாடு முழுதும், 16 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம், 23 பாடப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த வகையில், ஒவ்வொரு மாநில கல்வித்துறையுடனும், சி.பி.எஸ்.இ., இணைந்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு விரைவில் துவங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.