'புதிதாக துவங்கப்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, ஜாக்டோ ஜியோவுக்கு போட்டியான அமைப்பில்லை' என, அதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ என்ற கூட்டமைப்பாக, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்த அமைப்பு போல, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாகி உள்ளது. இது குறித்து, நம் நாளிதழில் ( தினமலர் ) நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, புதிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் தியாகராஜன் கூறியதாவது:
ஏற்கனவே, ஜாக்டோ ஜியோவில் உள்ள எட்டு ஆசிரியர் அமைப்புகள் இணைந்து, தனி குழுவாக செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று தான், 19 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ஆசிரியர் கூட்டமைப்பாக உருவாகியுள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு என்பது, ஜாக்டோ ஜியோவுக்கு எதிரானதோ, மாற்றானதோ இல்லை. ஆசிரியர்களுக்கு பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண உருவாக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.