பேச்சுவார்த்தை தோல்வி - 10ஆம் தேதி கோட்டையை முற்றுகையிட பகுதி நேர ஆசிரியர்கள் முடிவு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, December 7, 2024

பேச்சுவார்த்தை தோல்வி - 10ஆம் தேதி கோட்டையை முற்றுகையிட பகுதி நேர ஆசிரியர்கள் முடிவு!

869

அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களிடம் பணி நிரந்தரம் குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து திட்டமிட்டு வருகிற டிச.10 தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்ததுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களிடம் பணி நிரந்தரம் குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து திட்டமிட்டு வருகிற டிச.10 தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்ததுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகின்றனர். அப்போதைய போராட்டங்களில் தற்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நேரடியாக கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

மேலும், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்திருந்தனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் 181 நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்களும் ஒன்றாக இணைந்து வரும் டிச.10ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பாபு உள்ளிட்டோரை அழைத்து அதிகாரிகள் நேற்று (டிச.6) பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, தொடர்ந்து திட்டமிட்டபடி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த நடத்த பகுதி நேர ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாபு, “பகுதிநேர ஆசிரியர்கள் மாதம் 12,500 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகிறோம் 16 ஆயிரத்து 450 பேர் இருந்தோம் ஆனால் தற்பொழுது 12000 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளோம் மேலும் வரும் டிசம்பர் மாதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற உள்ளனர்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181 கூறியபடி பகுதிநேர ஆசிரியர்களை பணியில் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே திட்டமிட்டபடி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். மாநில திட்ட இயக்குனர் எங்களை அழைத்து பேசும் போதும் கோரிக்கையை அரசிடம் தெரிவித்தோம்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எங்கள் கோரிக்கையை முதலமைச்சர் இடம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என தனிப்பிரிவிலும் மனு அளித்துள்ளோம். ஆனால் முதலமைச்சரை சந்திக்க முடியவில்லை. திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181 நிறைவேற்ற வேண்டும் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பணி நிரந்தரம் செய்யாவிட்டால் எங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்” என தெரிவித்தார்.


Post Top Ad