5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து!

IMG_20241223_173647

பள்ளிகளில் 5வது மற்றூம் 8வது படிக்கும் மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்துசெய்துள்ளது மத்திய அரசு

 பள்ளிகளில் எழுத்துக்கல்வி என்பது எல்லோருக்கும் கட்டாயம் தேவை என்ற அடிப்படையில், 8ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் வைக்கப்பட்டாலும் இலவச தேர்ச்சி அல்லது கட்டாய தேர்ச்சி என்ற முறை பின்பற்றப்பட்டுவந்தது.


அந்தவகையில் மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்கப்பட்டாலும், சரியாக படிக்கும் மாணவர்கள், படிக்காத மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோரும் தேர்ச்சி என்ற முறை 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறையில் இருந்துவருகிறது.

இந்நிலையில், மாணவர்களுக்கு கட்டாயத்தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து..

மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்ற கொள்கை முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களுக்கு பின் மறுதேர்வு நடத்தப்படும். ஒருவேளை இரண்டாவது வாய்ப்பிலும் தேர்ச்சி பெறாவிட்டால் அடுத்த வகுப்புக்கு மாணவர்களை அனுப்பக் கூட்டாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive