உயர்கல்வி
நிறுவனங்களில் கேட் அல்லது சிஇஇடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை
பெற்ற முதுநிலை மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு
வருகிறது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த செப்டம்பர் 2-ல் தொடங்கி நவம்பர் 30-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனிடையே, பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் https://-pgscholarship.aicte-india.org/ என்ற வலைதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை https:// www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.