இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொது தேர்வுகளை மார்ச்-ஏப்., 2025 தேர்வு எழுத விண்ணப்பிக்க உள்ள தனி தேர்வர்கள் இன்று (20ம் தேதி) மாலை 5:00 மணிக்குள் பவானி, பெருந்துறை, ஈரோடு, சத்தி அரசு மகளிர் மேல்நிலை பள்ளிகள், கோபி நகரவை மகளிர் மேல்நிலை பள்ளி, ஈரோடு இடையன்காட்டு வலசு நகரவை உயர்நிலை பள்ளி, ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே காலனி நகரவை மேல்நிலை பள்ளி சேவை மையங்களில் விபரம் பெற்று கட்டண தொகை மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இறுதி நாள் என்பதால் தேர்வு எழுத விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் அறியலாம்.