இப்படி கூட பாடம் நடத்தலாமா..? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, December 19, 2024

இப்படி கூட பாடம் நடத்தலாமா..?

595

இப்படி கூட பாடம் நடத்தலாமா..?

ஆசிரியர் ஒருவர் தனது தனித்துவமான கற்பிக்கும் முறையால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். 54 வினாடிகள் கொண்ட வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வைரலானது.

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பல ஆசிரியர்கள் பாடம் நடத்தினாலும், ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள். மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்துவதும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிப்பதும், மாணவர்களுடன் நட்பாக பழகுவதும் ஆசிரியர்களை மாணவர்களுக்கு மிகவும் பிடித்தவர்களாக மாற்றி விடுகிறது.

சில ஆசிரியர்கள் தங்களது தனித்துவமான கற்பிக்கும் முறைகளால் இணையத்தில் வைரலாகி விடுகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது தனித்துவமான கற்பிக்கும் முறையால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அந்த வீடியோவில் இயற்பியல் ஆசிரியரான அவர் வேதியியல் பாடம் நடத்துகிறார். அப்போது மூலக்கூறுகளின் பண்பை குறிக்கவும், அவற்றின் தன்மையை விளக்கி கூறிய அவர் டிஜிட்டல் கருவிகளின் உதவியுடன் கற்பித்தார். அப்போது மாணவர்களுக்கு பாடத்தை புரிய வைப்பதற்காக தலைகீழான முறையில் கவிழ்ந்து ஒரு நாற்காலியில் தனது கால்களை சமன் செய்து கைகளை தரையில் வைத்து பாடம் நடத்தினார்.

தொடர்ந்து தனது கைகள், கால்கள் மற்றும் தலையை பயன்படுத்தி வேதியியல் கட்டமைப்பின் வெவ்வேறு கூறுகளை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்த காட்சியானது மூலக்கூறு எவ்வாறு சுழல்கிறது என்பதை காட்டும் எளிய வழி என அவர் விளக்கி உள்ளார். இது தொடர்பான 54 வினாடிகள் கொண்ட வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வைரலானது. பயனர்கள் பலரும் ஆசிரியரின் தனித்துவமான கற்பித்தல் முறையை பாராட்டி பதிவிட்டனர்.

Post Top Ad