ஆசிரியர்களுக்கும் உளவியல் பயிற்சி அளிக்கணும்! அரசுக்கு வலியுறுத்தல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, December 10, 2024

ஆசிரியர்களுக்கும் உளவியல் பயிற்சி அளிக்கணும்! அரசுக்கு வலியுறுத்தல்

மாணவர்களின் மன ரீதியான பிரச்னைகளை கையாளவதற்கு,  ஆசிரியர்களுக்கும் உளவியல் பயிற்சி அளிப்பதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பாடம் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள், குடும்ப சூழல், பொருளாதார வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

அதுபோல், ஆசிரியர்களுக்கும் மாணவர்களை கையாள்வது, கற்பித்தல் மற்றும் பள்ளி சூழலில் ஏற்படும் பிரச்னைகளால், மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். தற்போதைய சூழலில், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு, ஆசிரியர்களும் நாள்தோறும் வீட்டுப்பயிற்சி எடுத்து வருகின்றனர்.

மாணவர்களின் பதிவேடுகள், தனித்திறன் வளர்ப்பு போட்டிகள், செயல்வழிக்கற்றலுக்கான படைப்புகள் என பலவழிகளிலும், ஆசிரியர்களுக்கு பள்ளி தொடர்பான சிந்தனை மட்டுமே அதிகரித்துள்ளது.

இதனால், அவர்களும் மனதளவில் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புள்ளதாக, உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.மேலும் பள்ளியில் உள்ள மாணவர்கள் பலர் உளவியல் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த பிரச்னை கண்டறிவதற்கும், முறையாக அதை கையாளுவதற்கும் ஆசிரியர்களுக்கும் உளவியல் பயிற்சி தேவைப்படுகிறது. இது சம்பந்தமாக அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

மாணவர்களுக்கு இருப்பதுபோல், ஆசிரியர்களும், பல்வேறு உளவியல் பிரச்னைகளை பள்ளிகளில் சந்திக்கின்றனர். இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்.

மாணவர்களின் பிரச்னைகளை கேட்பதற்கும், முறையான வழிகாட்டுதல் வழங்குவதற்கும் ஆசிரியர்களுக்கும் உளவியல் நிபுணர்கள் வாயிலாக, பயிற்சி அளிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

இதன் வாயிலாக, அவர்களும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதல்களையும், கற்பித்தலை தருவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு கூறினார்.

ஆசிரியர்களுக்கு இந்த பிரச்னைக்கு, அரசும், கல்வித்துறையும் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Post Top Ad