திருநங்கைகளுக்கு இலவச உயர் கல்வி முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தகவல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, December 15, 2024

திருநங்கைகளுக்கு இலவச உயர் கல்வி முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தகவல்


இந்தாண்டு முதல் திருநங்கைகளுக்கு இலவசமாக உயர்கல்வி வழங்க இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் திருநங்கை திருநம்பி ஆவண மையம் மற்றும் கல்லுாரி சமூக நலத்துறை சார்பில் இரண்டு நாள் கலாசாரம், பண்பாடு குறித்த தேசிய அளவிலான 2 நாள் மாநாடு நேற்று துவங்கியது. கல்லுாரி தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர்.

மாநாட்டை துவக்கி வைத்த அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:


2008ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்தார். அடையாள அட்டை வழங்கப்பட்டது. தொழில் துவங்க கடனுதவி வழங்கினார். தற்போது முதல்வர் ஸ்டாலின், கடன் தொகையை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தி உள்ளார்.

இந்தாண்டு முதல் திருநங்கையருக்கு உயர் கல்வி கட்டணம் இலவசமாக்கப்பட உள்ளது. கடந்தாண்டு மருத்துவப் படிப்புக்காக ஒருவருக்கு ரூ. 4 லட்சம் ரூபாய் அரசு வழங்கியுள்ளது. சாதனை படைக்கும் திருநங்கையருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்குகிறது.

இவ்வாறு கூறினார்.

நாடகம், ஒயிலாட்டம், கரகாட்டங்களில் சாதனை படைத்த ஐந்து பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பிரியாபாபு ஏற்பாடு செய்தார். இன்றும் மாநாடு நடக்கிறது.


Post Top Ad