கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஆறு நாள் விடுமுறைக்குப்பின், கடலுாரில் பள்ளிகள் செயல்படத் துவங்கியது.
பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலுார் மாவட்டம் முழுவதும் நவ.29ம் தேதி முதல் டிச.3ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
டிச.4ம் தேதி, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பண்ருட்டி, அண்ணாகிராமம், கடலுார் ஒன்றிய பகுதிகளை தவிர்த்த பிறபகுதிகளில் நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டது. வெள்ளம் பாதித்த கடலுார் மற்றும் பண்ருட்டி தாலுாகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் செயல்படத் துவங்கியது. கனமழை, புயல் பாதிப்புக்குப்பின் மாணவர்கள் நேற்று முன் தினம் பள்ளிக்கு சென்றனர்.