மாற்று பணிகளால் பாடங்கள் நடத்த முடியாமல் முதுகலை ஆசிரியர்கள் அவதி, கள ஆய்வாளர்கள் பணிக்கு எதிர்ப்பு

 எண்ணும் எழுத்தும் மதிப்பீட்டுக்கான கள ஆய்வாளர்கள் பணியிலிருந்து முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். இதனால் பாடங்களை முடிக்க முடியாமல் திண்டாடுவதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தேனியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியதாவது:


தொடக்கல்வித்துறையில் எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டம் செயலப்படுத்தப்படுகிறது. இந்த பயிற்சியின் மதிப்பீட்டு பணிக்கு கள ஆய்வாளர்களாக முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள், உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி உள்ளிட்ட பல பணிகளை முதுகலைஆசிரியர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.இதனால் பாடப்பகுதிகளை முடிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடக்க கல்வி துறை சார்ந்த திட்டங்களை மதிப்பீடு செய்ய வட்டார வள மைய அலுவலர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும். முதுகலை ஆசிரியர்களை எண்ணும் எழுத்து திட்டபணியில் இருந்து விடுவிக்க வேண்டும்.

ஒரே துறையில் பல்வேறு அதிகாரிகளின் உத்தரவுகளை முதுகலை ஆசிரியர்கள் செயல்படுத்தும் நிலை தொடர்கிறது. 'பாடம் நடத்த விடுங்கள்' என போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive