லாரி வாடகையை கொடுக்காமல் ஆசிரியர் தலையில் கட்டும் அதிகாரிகள்

kalvi_L_241228114522000000

அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை வினியோகம் செய்ய லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலியை அரசு ஒதுக்குகிறது.

எனவே, ஆசிரியர்கள் சொந்த செலவில் பாடப்புத்தகம் எடுக்க வேண்டாம் என, ஆசிரியர் சங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்த உண்மை தெரியாமல், பல இடங்களில் ஆசிரியர்களை நிர்ப்பந்திக்கும் கல்வி அதிகாரிகள், பாடப் புத்தகங்களை எடுத்துச் செல்ல வலியுறுத்துகின்றனர்.


தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை உள்ளிட்ட பொருட்களை அரசு வழங்குகிறது. நேரடியாக அந்தந்த பள்ளிகளுக்கே வழங்க லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலியை, மாவட்ட வாரியாக அரசு ஒதுக்கீடு செய்கிறது.

தற்போது, 2024- - 25ம் கல்வி ஆண்டுக்குரிய மூன்றாம் பருவ இலவச பாட புத்தகங்களை பள்ளிகளுக்கு வழங்கி வருகின்றனர். பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும் லாரி வாடகைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.


ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் ஆசிரியர்கள் சொந்த செலவில் வாகனத்துடன் வந்து புத்தகத்தை எடுத்துச் செல்லுமாறு கல்வி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இது, ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலியாக மாவட்டத்திற்கு, 15 லட்சம் ரூபாய் வரை அரசு ஒதுக்கியுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்ட புத்தக வினியோகத்திற்கும், 12 - 15 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆனால், கல்வி அதிகாரிகள் இந்த செலவை ஆசிரியர்கள் மீது சுமத்துகின்றனர். எனவே, ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் புத்தகம் எடுக்குமாறு சொன்னால் புறக்கணிக்குமாறு தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive