CEO, DEO அதிகாரிகளுக்கான இரு நாள் ஆய்வுக்கூட்டம் நிறைவு


கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள், வரும் பொதுத் தேர்வுகளில் அதிக தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்குமாறு, ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

பாப்பம்பட்டி பிரிவு அருகே கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் என, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம், கடந்த இரு நாட்கள் நடந்தது.

முதல் நாளில், பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் ஆய்வுக்கூட்டத்தை துவக்கிவைத்து, கல்வித் துறைக்கு ஆசிரியர்களால் அவப்பெயர் ஏற்படாமல், மாணவர்களின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துமாறு கண்டிப்புடன் தெரிவித்தார்.

பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் தலைமையில், இரண்டாம் நாள் ஆய்வுக்கூட்டம் தொடர்ந்தது. அப்போது, கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள், வரும் மார்ச் மாதம் துவங்கும் பொதுத் தேர்வுகளில், அதிக தேர்ச்சி பெறும் வகையில், மாலை நேர வகுப்புகள் நடத்தி, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive